தாளவாடி அருகே யானை மிதித்து விவசாயி சாவு: சாலை மறியல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
தாளவாடி அருகே யானை மிதித்து விவசாயி சாவு: சாலை மறியல்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
Latest district News

தாளவாடி அருகே யானை மிதித்து விவசாயி இறப்பு விவசாயிகள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகம் திகனாரை செல்லும் வழியில் தர்மாபுரத்தை சேர்ந்தவர் மல்ல நாயக்கர்,72,தனது சொந்த நிலத்தில் 3 ஏக்கர் வாழை பயிரிட்டிருந்தார்.நேற்று இரவு காவலுக்காக சென்றிருந்தார்.நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து சென்றவர் சத்தம் போட்டுக்கொண்டே யானை இருக்கும் இடம் தெரியாமல் அருகில் சென்ற போது யானை மிதித்து சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.இன்று காலை காவலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என சென்று பார்த்த போது மல்லநாயக்கர் இறந்து கிடந்தார்.சம்பவத்தை கேள்விபட்டதும் விவசாயிகள் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு பிரேதத்தை எடுக்க விடாமல் கொங்கள்ளி சாலையில் 11.30 க்கு மறியல் செய்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது சமீப காலமாக யானைகளால் விவசாயிகளுக்கு பெருந்துயரம் ஏற்பட்டு வருகிறது.யானைகள் விவசாய நிலங்களில் வரும்போது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால் யாரும் எட்டி பார்ப்பதில்லை.யானைகள் ஊருக்குள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை.இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். சாலைமறியல் சம்பவத்தை கேள்விபட்ட தாளவாடி போலீசார்,மற்றும் தாளவாடி வனத்துறையினர் ஆசனுார் கோட்ட வன அதிகாரி தேவேந்திர குமார் மீனா,தாளவாடி வனச்சரகர் சதீஷ் கமல்,ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.சுமார் 4மணி நேரம் ஆசனுார் கோட்ட அதிகாரி தேவேந்திர குமார் மீனாவிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு திக்குமுக்காட வைத்தனர்.பதில் கூற முடியாமல் திணறினார்.பின்பு வனத்துறையின் சார்பில் இழப்பீடாக 5லட்சம்மற்றும்,வனத்துறையின் சிறப்பு நிதியில் இருந்து இரண்டரை லட்சம் என ஏழரை லட்சம் வழங்கப்படும் என உறுதியளித்ததையும்,அகழி அமைக்கும் பணி நாளை(ஜூலை 7) தொடங்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.முதற்கட்டமாக 1லட்சம்ரூபாய் வழங்கப்பட்டது.யானை மிதித்து இறந்து விவசாயி உடலை வாங்க மறுத்து மறியல் செய்த சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X