வாழப்பாடி:நாகர்கூடல் ஊராட்சி வார்டு உறுப்பினர், தனியார் கல் குவாரியில், உடல் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில், தனியார் கல்குவாரி உள்ளது.அங்கு, தர்மபுரி மாவட்டம், நாகர்கூடலை சேர்ந்த சாம்ராஜ், 34, பாறை உடைக்க பயன்படுத்தும் பிரத்யேக டிராக்டரில், டிரைவராக பணிபுரிந்தார். பா.ம.க.,வை சேர்ந்த இவர், தர்மபுரி மாவட்டம், நாகர் கூடல் ஊராட்சியில், வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.
இவரது மனைவி புனிதா, 27. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன்தினம், கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்த நிலையில், சாம்ராஜ் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். காரிப்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.சாம்ராஜ் உறவினர்கள், இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி வாக்குவாதம் செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.