பஸ் மோதி மூதாட்டி பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
பஸ் மோதி மூதாட்டி பலி
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 



பண்ருட்டி-பண்ருட்டி அருகே பஸ் மோதி மூதாட்டி இறந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் மலையான் மனைவி அஞ்சம்மாள்,62; கிச்சான் மனைவி நல்லிமுத்து,60; இருவரும் மேல்பட்டாம்பாக்கம் செல்ல மேல்கவரப் பட்டு பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை நின்றிருந்தனர்.அப்போது கடலுார் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் இருவரும் ஏற முயன்றனர். வேகமாக வந்த பஸ் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நல்லிமுத்து இறந்தார்.விபத்து நடந்த இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் காலை 10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டு, பஸ் கண்ணாடியை உடைத்தனர். பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று, 10:45 மணியளவில் மறியலை கைவிட்டனர்.இதனால் பண்ருட்டி - கடலுார் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X