இசை உலகின் ராஜா
Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

இவரது இசையைக் கேட்டால் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடல் தேவையில்லை. அதே போல காதலர்களுக்கு, முதியவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் இவரது இசை என்றால் கொள்ளை பிரியம். 'இசைஞானி' என உலக தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1970களில் துவங்கிய இவரது இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது. இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். 7000 பாடல்கள், 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் இவரை மிஞ்சுவதற்கு இசை உலகில் யாருமில்லை என கூறலாம். தென்னிந்திய இசையில் 'போக்' இசையை புகுத்தியவர் இவரே.'அன்னக்கிளி' வாய்ப்பு
'ஓ நெஞ்சமே' நாடகத்துக்கு இவர் இசையமைத்தபோது, 'அன்னக்கிளி' பட கதாசிரியர் செல்வராஜின் நட்பு கிடைத்தது. இவர் பஞ்சு அருணாசலத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். 1976ல் தன் 33 வயதில் முதல்பட வாய்ப்பான 'அன்னக்கிளி'யை பெற்றார். இப்படம் 100 நாட்களை கடந்தது. மச்சானை பார்த்திங்களா, சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அன்னக்கிளியே உன்னை தேடுதே, சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்...' என அனைத்து பாடல்களும் 'ஹிட்' அடித்தன. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர் 5 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசை அமைத்து அசத்தினார்.ஒரே இந்தியர்
1993ல் லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் 'சிம்பொனி' ஒன்றை இசையமைத்தார். அங்கு இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என அழைப்பர். ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசையை அமைத்தார். சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.30 நிமிடம்
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுக்கோ, அழகான லொகேஷன்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. 'தென்றல் வந்து தீண்டும்போது' என்ற பாடலை உருவாக்க எடுத்துக்கொண்டது வெறும் அரைமணி நேரம் தான்.400


இளையராஜா தன் சொந்தக் குரலில் 400 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.1000
இவர் இசையமைத்த 100வது படம் 'மூடுபனி'. 500வது படம் 'அஞ்சலி'. 700வது படம் 'எஜமான்'. 1000மாவது படம் தாரை தப்பட்டை. அதிகபட்சமாக கமலுக்கு 60, ரஜினிக்கு 54, பிரபுக்கு 48 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.40தமிழ் திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையமைப்பில் உருவானவை தான். 1980களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார்.சில துளிகள்...
* கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ.என்.வி.குருப், ஸ்ரீ குமரன் தம்பி, ஷி உதய ஷங்கர், குல்சார் உட்பட அனைத்து இந்திய கவிஞர்கள், பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார்.

* பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், மணிரத்தினம், பாசில், கே.விஸ்வநாத், சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன், வம்சி, சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உட்பட பல இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.

* படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம் கரகாட்டக்காரன்.

* அரை நாளில் மொத்த ரீ-ரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் நூறாவது நாள்.

* இந்தியாவில் கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா (புன்னகை மன்னன்).

* இவரது பாடலுக்காக கதை எழுதி வெற்றி கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள்,அரண்மனைக்கிளி.

* பருவமே,புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்.
* வேலைநேரங்களில் மட்டுமே இசையை யோசிப்பதில்லை. எப்போதும் இசையை பற்றியே நினைத்திருப்பார்.
* 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடல்.
* 1980களில் எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ், ரவீந்திரன், ஷியாம், ஜிகே.வெங்கடேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், மனோஜ் கியான்... என்று பலர் இசையமைத்து இருந்தாலும் இளையராஜாவின் கையே ஓங்கியிருந்தது.

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர்
டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். வயது 79ஐந்து தேசிய விருது
* பத்மபூஷண் - 2010

* பத்ம விபூஷண் - 2018

* ஐந்து முறை தேசிய விருது (சிந்து பைரவி, தாரை தப்பட்டை -தமிழ், சாகர சங்கமம், ருத்ர வீணா - தெலுங்கு, பழசி ராஜா - மலையாளம்)

* ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருது

* கலைமாமணி விருது

* நான்கு பிலிம்பேர் விருது

* ஐந்து நந்தி விருது

* வாழ்நாள் சாதனையாளர் விருது - 2015ல் கோவா சர்வதேச திரைப்பட விழா

* சங்கீத நாடக அகாடமி விருது-2012

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
07-ஜூலை-202213:30:04 IST Report Abuse
K.P  SARATHI பழைய சாதனைகளை போற்றுவது விட புதிய சாதனைகள் படைக்கவேண்டும்
Rate this:
Cancel
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202210:09:37 IST Report Abuse
krishsrk ஆம். நம்மை இளமை காலத்திற்க்கு கூட்டி செல்வது இசை. அந்த விதத்தில் இசை ஞானி உயர்ந்த இடத்தில் எல்லோர் மனத்திலும் நிற்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X