மதுரை : தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான கல்வித்தகுதியை குறைத்தும் கடன் தொகையை உயர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொழில் தொடங்குவோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
பெண்கள், பி.சி., எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 5 சதவீத முதலீடு செய்தால் போதும். குடும்பத்தில் முதன்முதலாக தொழில் துவங்குபவர்களாக இருந்தால் மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது. சேவைத்தொழில்களுக்கு 25 சதவீத மானியம் கிடைக்கும்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டி.ஐ.ஐ.சி.) மதுரை மேலாளர் தமிழரசன் கூறுகையில்,
நிபந்தனைகளை தளர்த்தி கடனை உயர்த்தி மானியத்தை அதிகரித்தாலும் இளைஞர்களிடம் தொழில் துவங்குவதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மதுரை மடீட்சியா வளாகத்தில் உள்ள டி.ஐ.ஐ.சி.,யின் கடன், மானியம் இரண்டும் வழங்கப்படும்'' என்றார்.