நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறையினர் தொழில் துவங்க கடன், மானியம் தயார் | மதுரை செய்திகள் | Dinamalar
நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறையினர் தொழில் துவங்க கடன், மானியம் தயார்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

மதுரை : தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான கல்வித்தகுதியை குறைத்தும் கடன் தொகையை உயர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொழில் தொடங்குவோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.



அரசின் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கான நீட்ஸ் திட்டத்தில் பட்டதாரிகள்மட்டுமே உற்பத்தி, சேவைத்தொழில் தொடங்க கடன், மானியம் பெறலாம் என குறிப்பிடப்பட்டது. தற்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு ஐ.டி.ஐ., பிளஸ் 2, டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது.

உற்பத்தி தொழில்களுக்கு குறைந்தது ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். இதில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலம் வாங்க, கட்டடம் கட்ட, இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் மற்றும் 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.கிராமம், நகரம் வேறுபாடின்றி தொழில் துவங்கும் பொதுப்பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதம் சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

பெண்கள், பி.சி., எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 5 சதவீத முதலீடு செய்தால் போதும். குடும்பத்தில் முதன்முதலாக தொழில் துவங்குபவர்களாக இருந்தால் மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது. சேவைத்தொழில்களுக்கு 25 சதவீத மானியம் கிடைக்கும்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டி.ஐ.ஐ.சி.) மதுரை மேலாளர் தமிழரசன் கூறுகையில்,

நிபந்தனைகளை தளர்த்தி கடனை உயர்த்தி மானியத்தை அதிகரித்தாலும் இளைஞர்களிடம் தொழில் துவங்குவதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மதுரை மடீட்சியா வளாகத்தில் உள்ள டி.ஐ.ஐ.சி.,யின் கடன், மானியம் இரண்டும் வழங்கப்படும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X