போலீஸ் செய்திகள்... | மதுரை செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்...
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

போக்சோ வழக்கு

மதுரை: மதுரை எம்.எம்.நகர் சதாசிவம் 36. இவர் 13 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்றபோது பின்தொடர்ந்தார். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். சதாசிவம் மீது போக்சோ சட்டப் பிரிவில் தெற்கு மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.அரசு பஸ் மீது கல்வீச்சு

மதுரை: அழகர்கோவில் ரோடு வலையப்படி அருகே அரசு டவுன் பஸ் நேற்றுமுன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தது. திடீரென மர்மநபர் கல்வீசியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. பயணி ஒருவரும் காயமுற்றார். அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி, மகன் இறப்பால் தற்கொலை

மதுரை: ஓடைப்பட்டி அழகு 50. இரு மாதங்களுக்கு முன் மனைவி வாகன விபத்தில் இறந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மின்விபத்தில் மகன் இறந்தார். இதனால் விரக்தியில் இருந்தவர் வீட்டருகே உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

.உண்டியல் பணம் திருட்டு

திருமங்கலம்: எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜாரி பூஜைகள் செய்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். இரவில் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தேர்ச்சி பெறாததால் தற்கொலை

மதுரை: ஒத்தக்கடை வவ்வால் தோட்டம் கிரிவளவன் 18. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் ஐ.டி.ஐ.,யில் சேருமாறு குடும்பத்தினர் கூறினர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நகை பணம் கொள்ளை

அவனியாபுரம்: மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு காலனி ரகுபதி 37. வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஏழரை பவுன் நகைகள், ரூ 5000 மற்றும் ஹோம் தியேட்டர் திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்றவர் கைது

மேலுார்: கீழவளவு பகுதியில் எஸ். ஐ., பாலகிருஷ்ணன் ரோந்து சென்றபோது பஸ் ஸ்டாண்ட் அருகே டூ வீலரில் வைத்து மது விற்ற அதே ஊரை சேர்ந்த வெற்றிவேலை 50, கைது செய்தனர். 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மனைவியை தாக்கிய கணவன் கைது

சோழவந்தான்: தென்கரை கோயில் தெரு வினோத்குமார் 33, ஆட்டோ டிரைவர். திருமணமாகி 4 மகள், 1 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மது போதையில் மனைவி கார்த்திகா 26, மற்றும் குழந்தைகளை தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

கிரேன் உதவியாளரிடம் வழிப்பறி

மேலுார்: நத்தம் கவுதம் 19, மேலுார் கொடிக்குளம் பகுதியில் தங்கி கிரேன் இயந்திரத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை டூ வீலரில் சிவகங்கையில் நடக்கும் ரேக்ளா ரேஸிற்கு சென்றார். மேலுார் முனிக்கோயில் அருகே டூவீலரில் வந்த இருவர் வழிமறித்து தாக்கி அலைபேசி, டூ வீலரை பறித்து சென்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

உசிலம்பட்டி: திடீர் நகர் மோகன் 18, ஓட்டிச் சென்ற டூவீலரில் இ.புதுப்பட்டி யுவராஜ் 17 பின்னால் அமர்ந்து சென்றார். (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) மாலை 5.30 மணிக்கு இ.புதுப்பட்டி முருகன் கோயில் அருகே முன்னால் சென்ற லோடு வேனில் டூவீலர் மோதியதில் யுவராஜ் கீழே விழுந்து பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X