போக்சோ, மோசடி வழக்கில் 4 பேர் கைது | மதுரை செய்திகள் | Dinamalar
போக்சோ, மோசடி வழக்கில் 4 பேர் கைது
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

மதுரை : மதுரையில் சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தை கூறி 10 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோ வழக்கும் பாய்ந்தது.



மதுரை லட்சுமிபுரம் 7 வது தெருவைச் சேர்ந்த சிறுமியிடம் புதுார் வண்டிபாதை பயாஸ்கான் 19, என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நட்பானார். நாளடைவில் காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்தார்.திருமணம் செய்வதாக கூறி வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்துவரச்செய்தார். அந்த நகைகளை புதுார் நண்பர் சதீஷ், சரவணகுமாரிடம் கொடுத்தார்.

சரவணக்குமாரின் தாயார் முத்துலட்சுமி அந்த நகைகளை பெற்று தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.2.70 லட்சம் பெற்றார். அதிலிருந்து ரூ.1.70 லட்சத்தை பயாஸ்கானிடமும், ரூ.20 ஆயிரத்தை சதீஷிடமும், ரூ.30 ஆயிரத்தை சரவணகுமாரிடம் கொடுத்து, தான் ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொண்டார்.

சிறுமி பெற்றோர் புகாரில் துணைகமிஷனர் மோகன்ராஜ் உத்தரவுபடி தல்லாகுளம் உதவிகமிஷனர் சூரக்குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அதிருத்தகண்ணன், போலீசார் ரஞ்சித், கார்த்திக் ஆகியோர் 4 பேரையும் கைது செய்து நகையை மீட்டனர். அவர்களை கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X