சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் பாலாலயம்: தினமலர் செய்தி எதிரொலி | மதுரை செய்திகள் | Dinamalar
சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் பாலாலயம்: தினமலர் செய்தி எதிரொலி
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

சோழவந்தான், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் புதுப்பிக்கும் பணி பாலாலய வைபவத்துடன் துவங்கியது.



இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. கட்டடத்தில் மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையான கோயில் நிலை குறித்து கடந்த டிச.,3ல் தினமலர் நாளிதழில்படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கோயிலை புதுப்பிக்க அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பக்தர்கள் நன்கொடை உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கான பாலாலயம் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்தது. மூலவர், சுவாமி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அறநிலையத்துறை துணை கமிஷனர் (நகை சரிபார்ப்பு) சுவாமிநாதன், நிர்வாக அலுவலர் இளமதி, சாய் மகராஜ் டிரஸ்டிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X