பெண்களை இழிவுபடுத்தினால் துன்பம்தான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு | மதுரை செய்திகள் | Dinamalar
பெண்களை இழிவுபடுத்தினால் துன்பம்தான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

மதுரை : அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது.'திரவுபதி மானம் காத்தல்' தலைப்பில் அவர் பேசியதாவது:திரவுபதிக்காகத்தான் பஞ்சபாண்டவர்களை போர்க்களத்தில் கிருஷ்ணர் வெற்றி பெற வைத்தார். பெண்களை இழிவுபடுத்துவோர், உடந்தையாக இருந்தவர்கள் துன்பத்தை அனுபவிப்பர். எந்த மதத்தைச் சார்ந்த பெண்ணிற்கும் இம்மாதிரி துன்பம் வரக்கூடாது என்ற தத்துவத்தை சொல்வதே திரவுபதி கதை.பஞ்சபாண்டவர்கள் சூதாட்டம் ஆடி ராஜ்ஜியம், மனைவியை இழந்தனர்.

சபையில் துரியோதனன் அவமானப்படுத்தியபோது கோவிந்தா, கோபாலா என திரவுபதி கத்தினார். இறைவனின் நாமம் புடவையை கொடுத்தது. இளமையில் பொய், சூது, களவில் ஈடுபட்டு ஐந்து இந்திரியமும் வயதான காலத்தில் செயல்படாதபோது திரவுபதிபோல் கோவிந்தா, கோவிந்தா என அழைத்தால்தான் கடவுள் ரட்சிப்பார் என்றார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X