கர்ப்பப்பை ரத்தநாளம் சுருங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கர்ப்பப்பை ரத்தநாளம் சுருங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 


கோவை : பெண்ணின் கர்ப்பப்பையில் ரத்த நாளங்கள் சுருண்டதை, நவீன முறையில் சிகிச்சை அளித்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உயிரைக்காப்பாற்றினர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்தது.

பிரசவம் முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார். 10வது நாளன்று அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, 5 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கர்ப்பப்பையில் ரத்த நாளங்கள் சுருண்டு இருப்பது தெரியவந்தது.கர்ப்பப்பையை அகற்றுவதன் வாயிலாக மட்டுமே, பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆனால், கோவை அரசு மருத்துவமனையின் நுண்கதிர் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் இணைந்து, 'யூட்ரின் ஆர்ட்டெரி எம்பாலிசேஷன்' மூலம் கர்ப்பப்பையையும், உயிரையும் காப்பாற்றினர். இவர்களை, டீன் நிர்மலா பாராட்டினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X