மழையால் பின்னலாடை ஆர்டர் குறைகிறது? | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மழையால் பின்னலாடை ஆர்டர் குறைகிறது?
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 


திருப்பூர், : நுால் விலை குறைந்தாலும், மழைக்காலம் துவங்கி விட்டதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைகிறது.கோடை மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.பஞ்சு விலை உயர்வால், கடந்த மே மாதம் வரை, 18 மாதங்கள் தொடர்ந்து நுால் விலை உயர்ந்து வந்தது.

இதன் எதிரொலியாக, கடந்த மூன்று மாதங்களாக வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது.தமிழகத்தில், ஒசைரி நுால் விலை தற்போது குறையத்துவங்கியுள்ளது; கடந்த 1ம் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. வரும் மாதங்களில் நுால் விலை மேலும் குறையும் எ-ன எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும், மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலையை உருவாகியுள்ளது.

லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:திருப்பூர் நிறுவனங்களுக்கு, குளிர் கால ஆடை தயாரிப்பு காலங்களில், மிக குறைந்தளவே ஆர்டர் கிடைக்கிறது. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் தொடரும் மழையால், ஆர்டர் வருகை மேலும் குறைந்துள்ளது.

பருவமழையால், வரும் நாட்களில் ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை மேலும் குறைவது தவிர்க்க முடியாததாகிறது.விநாயகர் சதுர்த்திக்கு பின் அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு பின், திருப்பூரின் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிக ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X