அமைப்புக்கு விருது வழங்கப்படாமல், தனி நபர் முன்னிலைப்படுத்தப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.விருது பெற்ற தங்கவேலிடம் கேட்டபோது, “யாரோ ஒருவரை முன்னிலைப்படுத்தி விருது அளிக்க வேண்டும் என்ற நிலையில், நான் பெற்றிருக்கிறேன். உரிய சான்றுகளை வைத்துள்ளேன். விருதை தனிப்பட்ட ஆதாயத்துக்கு பயன்படுத்தப்போவதில்லை.
2010ம் ஆண்டிலிருந்து இந்த சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். பரிசுத் தொகையை பசுமை மேம்பாட்டுக்கே செலவிடப்போகிறேன். விருதை தவறான முறையில் பெற்றதாகவோ, தவறாக பயன்படுத்தி விடுவேன் என கருதினாலோ, திருப்பிக் கொடுக் கவும் தயார்,” என்றார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகரன் கூறுகையில், “கலெக்டர் தலைமையிலான குழுதான், விருதாளர்களை முடிவு செய்தது. எங்கள் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவே செயல்பட்டோம். வந்திருக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புகார் குறித்து, கலெக்டர்தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.