இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 



புதுச்சேரி-உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் சார்பில், உதவித்தொகையுடன் கூடிய இலவச மேம்பாட்டு திறன் பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், உதவித் தொகையுடன் கூடிய இலவச மேம்பாட்டு பயிற்சி திட்ட முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நவயுகா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடுத்தர, சிறு, குறு தொழில் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி முகாம், நாளை (8ம் தேதி) இ.சி.ஆர். நவீன மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் நடக்கிறது.காலை 9.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை நடக்கும் முகாமில் ஆட்டோகேட், 3டி மாடலிங், மெக்கட்ரானிக்ஸ், பி.எல்.சி., சி.என்.சி., புரோகிராமிங் போன்ற அதிக வேலைவாய்ப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திறன் பயிற்சிகள் ஒரு மாதம் அளிக்கப்பட உள்ளது.பயிற்சி மேற்கொள்வோருக்கு 3,000 ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும்புதுச்சேரியில் வசிக்கும் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., முடித்த வேலை தேடும் இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 78068-01153, 98430-78960 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X