காஸ் விலை உயர்வு மகிளா காங்., கண்டனம் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
காஸ் விலை உயர்வு மகிளா காங்., கண்டனம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 



புதுச்சேரி-சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மகிளா காங்., வலியுறுத்தியுள்ளது.இது குறித்து புதுச்சேரி மகிளா காங்., மாநில பொதுச் செயலாளர் ரத்னா வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு அரசு தினம்தோறும் மக்களை வஞ்சிக்கக் கூடிய வகையில் வரி சுமைகளை ஏற்றி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் உபயோகிக்கும் பொருட்கள் மீது விலையை ஏற்றுவது மத்திய அரசுக்கு கைவந்த கலையாகி விட்டது.தற்போது, வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி ஓட்டு போட்ட மக்களை துன்புறுத்தி வருகின்றனர். கடந்த கால காங்., ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 450க்கு மானியத்துடன் வழங்கப் பட்டது. கூலி வேலை செய்யும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் விலையை இவ்வளவு அதிகமாக உயர்த்திய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X