கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் அடுத்த கீழ் பூவாணிக்குப்பத்தில் விக்னேஷ்வரா அறக்கட்டளையின் சார்பில், 14 ஆண்டுகளாக மாவட்டத்தில் தனித்துவத்துடன் விக்னேஷ்வரா பாலிடெக்னிக் கல்லுாரி இயங்கி வருகிறது.
இங்கு, முழுநேர வகுப்புகளாக DCE, DME, DEEE, DECE துறைகளும், பகுதிநேர வகுப்புகளாக DME, DEEE துறைகளும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தின் நேர்காணல் மூலமாக வேலை வாய்ப்பை பெற்று தருவது பற்றி கல்லுாரி தலைவர் சீனுவாசன் கூறுகையில், எங்கள் கல்லுாரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் அனைவருக்கும் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் முன்னணி நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தருகிறோம். இதன் மூலம் கிராம பகுதி மாணவர்கள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று சமூகத்தில் உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளனர்.நேர்க்காணலுக்காக தனி வேலைவாய்ப்பு அதிகாரியை அமைத்து பல முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறோம்.மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஆர்வத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் Inplant Training அனுப்பி வைக்கிறோம். நல்லொழுக்கத்துடன் கல்வி மற்றும் அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று தருவதால், விக்னேஷ்வரா பாலிடெக்னிக்கில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர் என, தெரிவித்தார்.