மூழ்கிய கப்பலில் 22 பேர் கடலோர காவல்படை மீட்பு
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து, 22 பேரை, கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.



ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, ஏராளமான பொருட்களை ஏற்றிக் கொண்டு, கர்நாடகா மாநிலம் கார்வார் பகுதிக்கு சரக்கு கப்பல் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்கு வந்தபோது, பலத்த மழை பெய்ததால், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதில் அந்த சரக்கு கப்பல் மூழ்கத் துவங்கியது.

இதையடுத்து போர்பந்தர் பகுதியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிநவீன, 'ட்ரோனியர்' ஹெலிகாப்டரில் சென்ற கடலோர காவல் படையினர், மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த, 22 ஊழியர்களை பத்திரமாக மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர். இந்த 22 பேரில், 20 பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X