கோவை: ''இந்திய மாதர் சங்கம் நடத்தும், 17 குழந்தைகள் காப்பகங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,'' என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 17 குழந்தைகள் காப்பகங்களை, இந்திய மாதர் சங்கம் நடத்துகிறது. இதற்காக, 2019-20, 2020-21ம் ஆண்டில், சங்கத்துக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையும், 2021-2022ம் ஆண்டுக்கான அனுமதி கடிதத்தையும், தமிழக அரசு வழங்கவில்லை.
இதனால், காப்பகங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.தமிழக அரசு தலையிட்டு, நிலுவையிலுள்ள மானியத்தொகையை உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.