'குழந்தைகள் காப்பகங்களுக்கு நிலுவை தொகை வழங்குங்க!' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'குழந்தைகள் காப்பகங்களுக்கு நிலுவை தொகை வழங்குங்க!'
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

கோவை: ''இந்திய மாதர் சங்கம் நடத்தும், 17 குழந்தைகள் காப்பகங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,'' என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 17 குழந்தைகள் காப்பகங்களை, இந்திய மாதர் சங்கம் நடத்துகிறது. இதற்காக, 2019-20, 2020-21ம் ஆண்டில், சங்கத்துக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையும், 2021-2022ம் ஆண்டுக்கான அனுமதி கடிதத்தையும், தமிழக அரசு வழங்கவில்லை.

இதனால், காப்பகங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.தமிழக அரசு தலையிட்டு, நிலுவையிலுள்ள மானியத்தொகையை உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X