கீழ்பவானி கான்கிரீட் தளம்: கைவிட சீமான் வலியுறுத்தல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கீழ்பவானி கான்கிரீட் தளம்: கைவிட சீமான் வலியுறுத்தல்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்: ''கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,'' என, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.



'நாம் தமிழர்' கட்சி சார்பில், குடிநீர், வேளாண்மை, சுற்றுச்சூழல் காக்கவும், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம், திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் நடந்தது.தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

கான்கிரீட் அமைக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, நுண்ணுயிர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். இந்த தொகுதியின் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளவர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X