கோவில் திருவிழா விவகாரம்: ஊராட்சி தலைவர் 'தர்ணா' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கோவில் திருவிழா விவகாரம்: ஊராட்சி தலைவர் 'தர்ணா'
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை, வாகைத்தொழுவு ஊராட்சி, சலவநாயக்கன்பட்டி புதுாரில், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு, ஒரு பிரிவினர் தன்னிச்சையாக, கோவில் திருவிழா நடத்த முயற்சி மேற்கொண்டனர்.



இதனால், இரு தரப்பிடையே பிரச்னை ஏற்பட்டது.தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், கோவில் திருவிழா நடவடிக்கை எதுவும் துவங்க வேண்டாம்; பத்து நாளுக்கு பின் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை பொருட்படுத்தாமல், ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் இரவு திருவிழா பணிகளை துவங்கினர்.

அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வாகைத்தொழுவு ஊராட்சி தலைவர் சுதா தலைமையில், ஊர் நாட்டாமை ஆறுமுகம் உள்ளிட்டோர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். கோரிக்கை மனுவை, கலெக்டர் உதவியாளர் மற்றும் திருப்பூர் எஸ்.பி.,யிடம் அளித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X