ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம்கந்து வட்டி: இருவர் மீது வழக்கு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம்கந்து வட்டி: இருவர் மீது வழக்கு
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 



விழுப்புரம்-ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கந்து வட்டி வசூலித்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டமானடியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 66; ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் நாஹர், 58; மற்றும் அவரது மகன் மகாவீர்சந்த் நாஹர், 29; ஆகியோரிடம் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல தவணைகளாக 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி யுள்ளார்.பின், வட்டி 12 லட்சம் ரூபாயுடன் 25 லட்சம் ரூபாய் கட்டி முடித்து விட்டு, தான் கொடுத்த ஆவணங்களை திருப்பிக் கேட்டதற்கு ராஜேந்திரகுமார் நாஹர், மகாவீர்சந்த் நாஹர் ஆகியோர் மேலும் 4 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.இது குறித்த புகாரின்பேரில், ராஜேந்திரகுமார் நாஹர், மகாவீர்சந்த் நாஹர் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X