விலங்கின நோய்கள்விழிப்புணர்வு நிகழ்ச்சி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
விலங்கின நோய்கள்விழிப்புணர்வு நிகழ்ச்சி
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் உலக விலங்கின நோய்கள் தினத்தை முன்னிட்டு விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் ராஜா அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கால்நடைத் துறை உதவி இயக்குனர்கள் கந்தசாமி, சுதா தலைமை தாங்கினர். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஆறுமுகம் வரவேற்றார்.விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ரேபிஸ் உள்ளிட்ட நோய்களின் தன்மை குறித்தும், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழியேற்றனர்.இளநிலை பூச்சியியல் வல்லுநர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஸ்வரன், வசந்தன் மற்றும் நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள், கால்நடைத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X