கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம்லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை: டெண்டர் முறைகேடு தொடர்பாக, கோவை மாநகராட்சி உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.



கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மற்றும்சென்னை மாநகராட்சிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கான டெண்டர் கோரியதில் முறைகேடுநடந்ததாக பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், டிப்பர் லாரி, டிரைவர், கிளீனர் நியமித்ததில் கோவை மாநகராட்சிக்கு ரூ.25.28 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, ஏற்கனவே குற்றம் சாட்டிய லஞ்ச ஒழிப்பு துறை, முன்னாள் கமிஷனர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிய அனுமதி கோரி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

இச்சூழலில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்திய போது, வேறொரு ஒப்பந்ததாரரின் ஏராளமான கோப்புகள் சிக்கியது. இது, லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்ததாரரை அழைத்து விசாரித்தபோது, 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் வேலை செய்ய டெண்டர் கோரியபோது, குறைந்தபட்ச ஒப்பந்தப்புள்ளி கோரியதால், பல வேலைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், என்னை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டனர். தொடர்ந்து தொந்தரவு செய்தனர்' என, கூறியிருக்கிறார்.இதன் மீது விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறை, அப்போது பணிகள் செய்த, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தது. அதன்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்துக்குள் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

உதவி பொறியாளர்கள் ராஜேஷ், சபிதா, இளநிலை பொறியாளர்கள் பாலசந்தர், கல்யாணசுந்தரம், பர்மான் அலி, கனகராஜ், கிளார்க்குகள் தேவி, செந்தில், கனகலட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.அவர்களிடம், காலையில் இருந்து மாலை வரை விசாரித்தனர். இது, மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X