'பின் வாசல் நியமனங்களை பணி வரன்முறை செய்யக் கூடாது!'
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: 'பின் வாசல் வழியாக நியமனம் பெற்றவர்களை, பணி வரன்முறை செய்யக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பெற்றோர் - ஆசிரியர் சங்கம் வாயிலாக, அரசு பள்ளிகளில் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களாக, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டகோவிந்தராசு என்பவர் உள்ளிட்ட நான்கு பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.பணி வரன்முறை செய்யக் கோரியதை, பள்ளி கல்வித் துறை நிராகரித்ததை எதிர்த்து, இந்த வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் தங்களை, பணி வரன்முறை செய்ய உத்தரவிடவும், மனுவில் கோரப்பட்டது.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:விதிகளை தளர்த்தி, பணி வரன்முறை செய்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவ்வாறு விதிகளை, தற்போது தளர்த்த முடியாது. முறையற்ற நியமனங்களை, விதிகளை தளர்த்தி வரன்முறை செய்ய முடியாது.தேர்வு விதிகளை மீறி, பணி வரன்முறை மற்றும் நிரந்தரம் செய்ய முடியாது. அரசு வேலைக்காக, போட்டி தேர்வுகளை, லட்சக்கணக்கில் இளைஞர்கள் எழுதுகின்றனர்.

அப்படி இருக்கும்போது, பின் வாசல் வழியாக, சட்டவிரோதமாக நடந்த நியமனங்களை பணி வரன்முறை செய்தால், மற்றவர்களின் உரிமைகளில் மீறல் நடப்பது போலாகும்.போட்டி தேர்வு வாயிலாக, தகுதியானவர்களுக்கு பணி கிடைப்பதை உறுதி செய்ய, பின் வாசல் வழியான நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். தகுதி படைத்தவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதிமன்றங்களுக்கு உள்ளது.

எனவே, பின் வாசல் வழியாக நியமனம் பெற்றவர்களை, பணி வரன்முறை செய்யக் கூடாது; அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை, எந்த வாசல் வழியாக வந்தனரோ, அந்த வாசல் வழியாகவே திருப்பிஅனுப்ப வேண்டும்.

மனுதாரர்களைப் பொறுத்தவரை, கல்வித் துறையால் நியமிக்கப்படவில்லை; பெற்றோர் - ஆசிரியர் சங்கம் வாயிலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கம் பராமரிக்கும் நிதி வாயிலாக, சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு, பணி வரன்முறை வழங்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X