செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

'ஆன்லைனில் பொருளியல் படிக்கிறேன்'
கோபி: கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான, ஓராண்டு பட்டயக்கல்வி துவக்க விழா கோபியில் நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து பேசியதாவது:
படிப்பு என்பது எந்த வயதிலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் படிக்கலாம். படிப்பு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகும். அதனால், வயது வித்தியாசமின்றி, இன்றும் படிப்பவர்கள் அதிகம் உள்ளனர். அதன்படி, நான் கூட தற்போது, ஆன்லைனில் பொருளியல் பாடம் படிக்கிறேன். இந்த பயிற்சியால் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்ள முடியும். தவிர, உங்களால் விவசாயிகளும் பயனடைவர். இவ்வாறு அவர் பேசினார்.

விதைச்சான்று
உதவி இயக்குனர் ஆய்வு
தாளவாடி: தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதிகளில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்ட மலைப்பகுதியான திங்களூர், கடம்பூர், குன்றி போன்ற கிராமங்களில்உள்ள விவசாயிகள், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி பெற்றனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பயறு வகைகளான உளுந்து வம்பன்-10, பாசிப்பயறு கோ-8, தட்டைபயறு கோ (சி.பி)-7 ரகங்களின் ஆதார நிலை விதைகளை மானிய விலையில் வழங்கி, விதைப்பண்ணை அமைத்துள்ளனர். இவ்விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மாரியப்பன், விதைச்சான்று அலுவலர் அருணாஜோதி, பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து ஆகியோர்
பங்கேற்றனர்.

படுக்கை அறையில்
பதுங்கிய பாம்பு சிக்கியது
ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; ஆட்டோ டிரைவர். நேற்று காலை வீட்டில் இருந்தபோது, படுக்கை அறையில் இருந்து வினோதமான சத்தம் கேட்டது. படுக்கை அறையை சோதனை செய்தபோது, பாம்பு ஒன்று பதுங்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். செந்தில்குமார் வீட்டுக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி முனிசிபல்காலனி பாப்பாத்திகாடு 2 வது வீதியில் பாலமுருகன் கோயில் உள்ளது. கோவிலில் செல்வகணபதி, தர்மசாஸ்தா, சிவகாமசுந்தரி, அம்பிகை சமேத கைலாசநாதர் மற்றும் லட்சுமி நாராயணர், ராம பக்த
ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக ஜூன் 26ல் முகூர்த்தகால் மற்றும் முளைப்பாலிகை போடப்பட்டது. கும்பாபிஷேக விழா, 4ம் தேதி கணபதி பூஜை, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை ரக்ஷா பந்தனம், 108 திரவியங்களால் திரவியாகுதி, திருமறை பாராயணம் நடந்தது. கடந்த 5ல் வேத பாராயணம், மகா பூர்ணாதுதி நடந்தது. நேற்று அதிகாலை சிவாச்சாரியார்கள் பங்கேற்று கோவிலின் கும்பம், மூலவர் மற்றும் பரிவாராதனை பீடங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இன்று முதல் மண்டல பூஜை நடக்கிறது.

காங்கேயம் தாசில்தார் பொறுப்பேற்பு
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகாவின், புதிய தாசில்தாராக, புவனேஸ்வரி என்பவர், நேற்று, பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இதற்கு முன், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்தார். காங்கேயம் தாசில்தாரக பணியாற்றி வந்த ஜெகதீஸ்குமார், தாராபுரம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கும்பாபிேஷகம் 5ம் ஆண்டு நிறைவு விழா
சென்னிமலை: சென்னிமலை நகரில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோவில் கும்பாபி ேஷக ஐந்தாமாண்டு நிறைவு விழா, நேற்று நடந்தது. கடந்த, 2017ல் கும்பாபி ேஷக விழா நடந்தது. தற்போது ஐந்தாண்டு பூர்த்தியானதை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு யாகத்துடன், பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமண பொருட்களால், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
* சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது. உற்சவர் நடராஜ பெருமானுக்கும், தாயார் சிவகாமி அம்மையாருக்கும், 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின், அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கவுதாரிக்கு 'கன்னி வலை'
வைத்தவருக்கு அபராதம்
அந்தியூர்: அந்தியூர் வனச்சரகத்துக்குட்பட்ட, பர்கூர் காப்புக்காடு, மூலப்பாறை சரக பகுதியில், நேற்று காலை, வனச்சரக அலுவலர் உத்தரசாமி தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக, சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நகலுார், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவர் கவுதாரிகளை பிடிக்க, 'கன்னி வலை' வைத்துவிட்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து, அந்தியூர் வனத்துறையினர், பழனிசாமிக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X