மயிலாடி மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
மயிலாடி மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 


சென்னிமலை, முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள, மயிலாடி மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, மயிலாடியில், பழமையான செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 21ல், மங்கள இசையுடன் விழா தொடங்கி, தினமும் இரண்டு கால யாக பூஜைகள் நடந்து வந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நிறைவேள்வி, தீபாராதனை நடந்தது.

காலை, 6:45 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X