போலீஸ் டைரி - ஈரோடு
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மொபட் திருடன் சிறையில் அடைப்பு
பெருந்துறை: அந்தியூர், எண்ணமங்கலம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மாறன் மகன் சுப்பிரமணியம்,45; பெருந்துறையிலுள்ள ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன் தினம் காலை, தன் டி.வி.எஸ்., மொபட்டை கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். பிற்பகலில் சாப்பிட செல்ல மொபட்டை எடுக்க வந்து பார்த்தபோது காணவில்லை. பெருந்துறை போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். போலீசார், கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் ஒருவன் மொபட்டை திருடி செல்வதை கண்டுபிடித்தனர். நேற்று ஒடிசா மாநிலம், போலாங்கூர் மாவட்டம், ராம்பூர், புடிபேதரைச் சேர்ந்த சங்கர் குமார் மகன் ரஞ்சன்குமார்,25, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் மது விற்ற 12 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். நம்பியூர் அவிநாசி சாலையில் நம்பியூரை சேர்ந்த பண்ணாரி, 62. அந்தியூர் பிரம்மதேசம் புதூரில் பெருமாபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, 43. சத்தி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கரட்டூரை சேர்ந்த சிவசக்தி பாலமுருகன், 32. கடத்தூரில் எலத்தூரை சேர்ந்த முனியப்பன், 45 உட்பட, 12 பேர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹோண்டா பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயில் மோதி மூதாட்டி பலி
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளி அன்னை சத்யா நகர் மாரிமுத்து மனைவி லட்சுமி, 85; நேற்று முன் தினம் இரவு ஆனங்கூர்-காவிரி இடையேயான ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக, கடக்க முற்பட்டார். அப்போது அவ்வழியே வந்த ரயில் மூதாட்டி மீது மோதியது. இதில் தலை, இடுப்புக்கு கீழ் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அங்கேயே இறந்தார். ஈரோடு ரயில்வே போலீசார், மூதாட்டி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில், நேற்று காலை மாரப்பம்பாளையம்-பெருந்தலையூர் இடையே ஐயம்பாளையம் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆம்னி வேனை ஓட்டி வந்த யுவராஜ், 32, என்பவரை வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1,050 கிலோ ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.

மொபட்டில் இருந்து
கீழே விழுந்த பெண் சாவு
பெருந்துறை: ஈரோடு அடுத்த, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூரைச் சேர்ந்தவர் சேகர்,55. இவர், நேற்று தன் மனைவி பெரியநாயகி,48, அழைத்துக் கொண்டு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல் மொபட்டில், பெருந்துறை அருகிலுள்ள விஜயமங்கலம் சென்றார். பெருந்துறை சிப்காட் வளைவு அருகில் சென்றபோது, மொபட்டில் இருந்து பெரியநாயகி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்தவரை, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை இறந்தார்.
பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு பஸ் மோதியதில்
அடையாளம் தெரியாதவர் பலி
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் டோல்கேட் அருகில், நேற்று காலை நடந்து சென்ற, 30 வயது மதிக்க தக்கவர் மீது, அரசு பஸ் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X