இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கோபியில் தேனீக்கள் பூங்கா துவக்கம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கோபியில் தேனீக்கள் பூங்கா துவக்கம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீக்கள் பூங்கா நேற்று திறக்கப்பட்டது.
கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தேனீக்கள் வளர்ப்பை அதிகரிக்கும் விதமாக, தேனீக்களுக்கான பூங்காவை உருவாக்கியுள்ளனர். இரு அடுக்குகள் கொண்ட நான்கு தேன்கூடு பெட்டிகளை தாங்கி நிற்கும் மரம் போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய தேனீக்களுக்கு நான்கு பெட்டியும், கொசுந்தேனீக்களுக்கு ஒரு பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேனீக்கள் பூங்கா என பெயரிட்டு, அதன் துவக்க விழா நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேனீக்கள்
பூங்காவை துவக்கி வைத்தார்.

அப்போது முதன்மை விஞ்ஞானி அழகேசன், விஞ்ஞானி சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, தேனீக்கள் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொசுத்தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மாதிரி செயல்விளக்க பூங்காவில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்களிடம், தேனீக்கள் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X