புகார் பெட்டி | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி
Added : ஜூலை 08, 2022 | |
Advertisement
 



கழிவு நீரால் துர்நாற்றம்

வில்லியனுார் எம்.என்.ஆர்., மங்கலம் நகர் பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனை பிரிவுகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கணேசன், வில்லியனுார்.தெரு நாய் தொல்லைதட்டாஞ்சாவடி , நடராஜன் தெரு, சின்னையன் பேட்டை பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர்.பத்மநாபன், தட்டாஞ்சாவடி.திருக்கனுார், தேவநாதன் நகர் ,மூன்றாவது தெருவில், நாய் தொல்லை அதிகமாக உள்ளது.ரமேஷ்கிருஷ்ணன், திருக்கனுார்.கலங்கலாக வரும் குடிநீர்முதலியார்பேட்டை, நைனார்மண்டபம் வள்ளலார் நகர் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.சுப்ரமணியன், முதலியார்பேட்டை.சாராயக் கடையால் இடையூறு அரியாங்குப்பம், மணவெளி ரோடு திருமால் நகரில் சாராயக்கடை உள்ளது. அங்கு வருபவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.வினோத், அரியாங்குப்பம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X