செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : ஆக 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


பவானியில் ரேக்ளா பந்தயம்
பவானி, ஆக. 1-
குதிரை ரேக்ளா பந்தயம், பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில் ஈரோடு, கோவை, திருச்சி, நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நுாற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. குதிரையின் உயரத்துக்கு ஏற்றவாறு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும், 15 குதிரைகள் என, 12 சுற்றுகளாக போட்டி நடந்தது. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று மக்கள் ரசித்து பார்த்தனர். வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு, சுழற் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

ஜெயின் சமூகத்தினர் பாத யாத்திரை
ஈரோடு, ஆக. 1-
பவானியில் இருந்து புனித நீர் சுமந்து ஈரோடு வரை, ஜெயின் சமூகத்தினர் நேற்று பாதயாத்திரை சென்றனர்.
ஸ்ரவண மாதம் புனித மாதமாக ஜெயின் சமூகத்தினரால் கருதப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை, 200க்கும் மேற்பட்டோர், பவானி கூடுதுறையில் இருந்து, புனித நீரை காவடியில் சுமந்தபடி, பாத யாத்திரையாக ஈரோடு இந்திரா நகர் ஜெயின் கோவிலை அடைந்தனர். பக்தி பாடல்கள், சரண கோஷமிட்டபடி வந்தனர். இந்திரா நகர் ஜெயின் கோவிலில் அபிஷேகம், வழிபாடு, ஆராதனை நடந்தது. பாத யாத்திரையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பத்து, பிளஸ் ௧ துணைத்தேர்வு
நாளை துவக்கம்: 4,181 பேர் ரெடி
ஈரோடு, ஆக. 1-
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவங்குகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில், 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய கல்வி மாவட்டங்களில் தலா ஒரு தேர்வு மையத்தில் நாளை தொடங்கி, 8ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. மொத்தம், 2,615 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வு நாளை தொடங்கி, 10ல் நிறைவு பெறுகிறது. 1,566 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காகவும் கல்வி மாவட்டத்துக்கு தலா ஒன்று என ஐந்து தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
* ஆசிரியர் பட்டய பயிற்சி துணை தேர்வு வரும், ௫ம் தேதி தொடங்கி, 29ல் நிறைவு பெறுகிறது. தேர்வெழுத, 1,387 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் மட்டும் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

டீ கடையில் குட்கா
பதுக்கியவர் கைது
ஈரோடு, ஆக. 1-
ஈரோடு, வில்லரசம்பட்டி, தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் சோமன், 44; ஈரோடு, தென்றல் நகரில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீரப்பன்சத்திரம் போலீசார் டீ கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள், 11 கிலோ இருந்தது. சோமன் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கொரோனா பாதிப்பில் உச்சம்
ஈரோடு, ஆக. 1-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 83 பேருக்கு கொரோனா உறுதியானது. 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, 447 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பரவலில் தமிழக அளவில் ஈரோடு நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பவானி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பவானி, ஜூலை 32-
பவானி புது டி.எஸ்.பி.,யாக, அமிர்த
வர்ஷினி, நேற்று பெறுப்பு ஏற்றுக்கொண்டார். பவானி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஆப்பக்கூடல், சித்தோடு, அம்மாபேட்டை, அந்தியூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர், பவானி போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வரட்டுப்பள்ளத்தில்
80 மி.மீ., மழை
ஈரோடு, ஆக. 1-
வரட்டுபள்ளத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 80 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில், ௮௦ மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-13, தாளவாடி-8.4, அம்மாபேட்டை-11, குண்டேரிபள்ளம்-7.6. வரட்டுப்பள்ளத்தில் அதிகபட்ச மழை பெய்துள்ளதால், வரும் நாட்களில் வன விலங்குகள் தண்ணீர் தேடி மலை கிராமங்கள், விவசாய நிலங்களுக்கு வரும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியோர விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கொடுமுடியில் கொ.ம.தே.க.,
கண்டன ஆர்ப்பாட்டம்
கொடுமுடி, ஆக. 1-
ஈரோடு கிழக்கு மாவட்ட, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து, கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கொ.ம.தே.க., கொடுமுடி தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரிராம் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், மாநில பொருளாளர் பாலு முன்னிலை வகித்தனர்.
அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரி, காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், வரி விதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்டம் சார்பில்
வாழ்த்து அட்டை தயாரிப்பு
ஈரோடு, ஆக. 1-
ஈரோடு, சம்பத் நகர் நவீன நுாலகத்தில் சிறுவர், சிறுமியர், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து அட்டை தயாரித்தனர்.
ஈரோடு, சம்பத் நகர், நவீன நுாலகத்தில், சிறுவர் வாசகர் வட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, 25 சிறுவர், சிறுமியர் வாழ்த்து அட்டை தயாரித்தனர். முன்னதாக அரை மணி நேரம் புத்தகம் படித்தனர். அவர்களுக்கு கதை சொல்லி பொருளை விளங்க செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இறுதியாக விளையாட்டில் ஈடுபட்டனர்.

போதையில் விபரீத முடிவு
ஈரோடு, ஆக. 1-
ஈரோட்டில் மது போதையில், கட்டட தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரம், தங்கமணி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 38, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி ஜோதிலட்சுமி, 34; இருவரும், 16 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி குடிப்பழக்கம் இருந்தது. போதை அதிகமாகும் போதெல்லாம், தற்கொலை செய்து கொள்வதாக கூறுவார். நேற்று முன்தினம் காலை, வீட்டின் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி, தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கிருஷ்ணமூர்த்தி ஓடினார். மனைவி, மகன்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டுக்குள் சென்ற கிருஷ்ணமூர்த்தி, சிறிது நேரத்தில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.55.45 லட்சத்தில்
வளர்ச்சி பணி துவக்கம்
கோபி, ஆக. 1-
கோபியில், 55.45 லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். ஜெ.ஜெ., நகரில் மழைநீர் வடிகால் அமைத்தல், மணி

மேகலை வீதியில், மழைநீர் வடிகாலுடன் சிறு பாலம் அமைத்தல் என, 14 இடங்களில், திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி
மாணவியருக்கு பாராட்டு
ஈரோடு, ஆக. ௧-
தமிழக அளவிலான பார்மசி கல்லுாரிகளுக்கு இடையே, நாமக்கல் மாவட்டம் குமார
பாளையம், ஜேகேகே நடராஜா கல்லுாரியில், விளையாட்டு போட்டி நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் கலந்து கொண்டன. இதில் ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லுாரி மாணவியர், கூடைப்பந்து மற்றும் த்ரோபாலில் இரண்டாமிடம் பிடித்தனர். மாணவி மங்கையர்
கரசி தேசிய அளவிலான த்ரோ பால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, கல்லுாரி சார்பில் பாராட்டு விழா நடந்தது. செயலாளர் நடராஜன், தாளாளர் சம்பத்குமார், முதல்வர் சரவணன், துணை முதல்வர் சுகுமார், பேராசிரியர்கள் பாராட்டினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X