செய்திகள் சில வரிகளில் சேலம்
Added : ஆக 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மாவட்டத்தில் 67 பேருக்கு தொற்று
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 67 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 26 பேர், தாரமங்கலம், மேச்சேரி தலா, 4, பெத்தநாயக்கன்பாளையம், சேலம் ஒன்றியம், சங்ககிரி, ஓமலுார் தலா, 3, மேட்டூர் நகராட்சி, கெங்கவல்லி, தலைவாசல், பனமரத்துப்பட்டி, ஆத்துார், இடைப்பாடி, நங்கவள்ளி தலா, 2 பேர், ஆத்துார் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, வாழப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி, வீரபாண்டி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 67 பேருக்கு தொற்று உறுதியானது.
காடையாம்பட்டியில் 17 மி.மீ., மழை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில், ஆங்காங்கே மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக காடையாம்பட்டியில், 17 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மேட்டூர், 13.2, பெத்தநாயக்கன்பாளையம், 13, ஆணைமடுவு, 8, சங்ககிரி, 7.4, ஆத்துார், 6.2, கெங்கவல்லி, 6, இடைப்பாடி, 4, தம்மம்பட்டியில் 2 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், வரும், 4 வரை மழை நீடிக்கும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டேங்க், சீட்கவர் சங்க அறிமுக கூட்டம்
சேலம்: சேலத்தில், மாவட்ட இருசக்கர வாகன டேங்க் கவர், சீட் கவர் உற்பத்தியாளர் லைனர், தொழிலாளர் நலச்சங்க அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கவுரவ தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். அதில் சங்கத்தை முறையாக பதிவு செய்தல், ஆயுள் சந்தா, 500 ரூபாய், மாத சந்தா, 100 ரூபாய் வசூலித்தல்; மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் சங்க உறுப்பினராக சேர்த்தல்; அடுத்து நலவாரிய உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு சங்கத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்வது என, முடிவெடுக்கப்பட்டது. தலைவர் முகமதுசபி, செயலர் பிரபாகரன், பொருளாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வைஷ்ணவ கருத்தரங்கம்
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் அருகே உள்ள, சுபிக் ஷா ஹாலில் வைஷ்ணவ கருத்தரங்கம் ‍நேற்று நடந்தது. திருக்கோவலுார், 26வது பட்ட எம்பெருமானார் ஜீயர் சுவாமி தலைமை வகித்தார். திருச்சித்ரகூடம் ரங்காச்
சாரிய சுவாமி, ஆளவந்தாரின் சித்தி திரயம் ‍என்ற தலைப்பில் பேசினார். அதேபோல், பெங்களூரு பரகாலன் சுவாமி, இளையவில்லி ஸ்ரீநிதி சுவாமி, ஹரிபிரியா அம்மங்கார், மதுரை ஜெகந்நாத
ராமானுஜதாசர், பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
பூலாம்பட்டியில் குவிந்த மக்கள்
இடைப்பாடி: பூலாம்பட்டியில் இருந்து ஆற்றின் மறு கரையில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல விசைப்படகு போக்குவரத்து உள்ளது. மேலும் காவிரி ஆறு பரந்து விரிந்து காணப்படுவதால் விசைப்படகில் காவிரி ஆற்றில் சுற்றுலா செல்ல ஏராளமானோர் வந்து செல்வர். அதன்படி, விடுமுறை நாளான நேற்று, ஏராளமானோர் வந்தனர். விசைப்படகு மூலம் சுற்றுலா சென்று ரசித்தனர். இதனால், பூலாம்பட்டி காவிரி கரையோரம் களைகட்டியது.
தீக்கிரையான வைக்கோல் போர்
காடையாம்பட்டி: சந்தைப்பேட்டையை சேர்ந்த, விவசாயி தங்கதுரை, 45. இவர் வீடு அருகே உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரில், நேற்று மாலை, 5:00 மணிக்கு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல், தீக்கிரையானதாக, தங்கதுரை
தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு பயிற்சி
அயோத்தியாப்பட்டணம்: அனுப்பூரில், குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கு அடர் தீவனம் தயாரித்தல் குறித்து, விவசாயிகளுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து, அப்பகுதி விவசாயிகளிடம் குறை கேட்டார். பின், 'அட்மா' திட்ட இனங்கள், உழவன் செயலி முக்கியத்துவம், முக்கிய பயிர் சார்ந்த தொழில்நுட்பம் குறித்து, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, சேலம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மைய உதவி பேராசிரியர் கோபி விளக்கம் அளித்தார். வேளாண் துறை திட்டங்கள் குறித்து, வேளாண் இயக்குனர் சரஸ்வதி விளக்கம் அளித்தார். மேலும், இத்திட்டம் தொடர்பான மக்கள் பங்கேற்பு மதிப்பாய்வு கூட்டம் அனுப்பூர் பொது சேவை மையத்தில் நடந்தது.
நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்
சங்ககிரி: சங்ககிரி நகர பா.ஜ., சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து, மக்களுக்கு தெரிவிக்கும் விழிப்புணர்வு முகாம், பச்சக்காட்டில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு சார்பில் கிராமம், நகரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மக்களிடம் துண்டு பிரசுரங்களை, அக்கட்சியினர் வழங்கினர். மேலும், மத்திய அரசின் திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச எரிவாயு அடுப்புடன் கூடிய சிலிண்டர்களை, 12 பெண்களுக்கு வழங்கினர்.
மதுக்கடை அகற்ற கோரிக்கை
நங்கவள்ளி: நங்கவள்ளி பா.ஜ., மேற்கு ஒன்றியம் சார்பில், செயற்குழு கூட்டம், ஜலகண்டாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய பொதுச்செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தல்; ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் இரு டாஸ்மாக் கடையை அகற்றுதல்; ஜலகண்டாபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'ரிங் ரோடு' அமைத்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X