குழந்தை திருட்டு வழக்கு 2 பேர் ஜாமின் தள்ளுபடி | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
குழந்தை திருட்டு வழக்கு 2 பேர் ஜாமின் தள்ளுபடி
Added : ஆக 02, 2022 | |
Advertisement
 

திருநெல்வேலி கீழபாப்பாகுடி முத்துச்செல்வி, ஆலங்குளம் களத்திமடம் கார்த்திகேயன். இவர்கள் உட்பட சிலர் ஒரு வீட்டில் 6 மாத குழந்தையை திருடியதாக பாப்பாகுடி போலீசார் வழக்குப் பதிந்தனர். குழந்தை மீட்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான முத்துச்செல்வி, கார்த்திகேயன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: இது பொய் வழக்கு என தெரிவித்தது.நீதிபதி: கனி என்பவர் சிலருடன் சேர்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு குழந்தையை திருடி விற்க முயன்றது தெரிகிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களை போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. ஜாமின் அனுமதித்தால் தலைமறைவாக வாய்ப்புள்ளது. விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X