பெற்ற மகளுக்கு குழந்தை கொடூர தந்தைக்கு 'போக்சோ'
Added : ஆக 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

வேலுார்:வேலுாரில், பெற்ற மகளையே கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்த கொடூர தந்தையை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர், 45 வயதான கூலித்தொழிலாளி. இவரது குடிப்பழக்கத்தால், மனைவி சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, சென்னையில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், 15 வயது மகன், 13 வயது மகளை கூலித்தொழிலாளி வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் வெளியே சென்ற நிலையில், மகள் பிரசவ வலியால் துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை, வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.செவிலியர்கள் விசாரித்ததில், சிறுமிக்கு திருமணமாக வில்லை என்பது தெரிந்தது.

இது குறித்து, வேலுார் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தினமும் மது குடித்து வந்த அந்த தொழிலாளி, மகளை கட்டாயப் படுத்தி, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்து, குழந்தை பிறந்தது தெரியவந்தது.சமூக நலத்துறை புகார்படி, வேலுார் மகளிர் போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வேலுார்மத்திய சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X