வேலுார்:வேலுாரில், பெற்ற மகளையே கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்த கொடூர தந்தையை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, வேலுார் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தினமும் மது குடித்து வந்த அந்த தொழிலாளி, மகளை கட்டாயப் படுத்தி, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்து, குழந்தை பிறந்தது தெரியவந்தது.சமூக நலத்துறை புகார்படி, வேலுார் மகளிர் போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வேலுார்மத்திய சிறையில் அடைத்தனர்.