கோவில்பட்டியில் தம்பதி வெட்டி கொலை | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
கோவில்பட்டியில் தம்பதி வெட்டி கொலை
Added : ஆக 06, 2022 | |
Advertisement
 

தூத்துக்குடி: கோவில்பட்டியில் கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, 2½ பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சொரிமுத்து மகன் பரமசிவன் (67). பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி (60) நேற்று இரவு 8 மணியளவில் கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் சாலையில் நடந்து வந்தபோது ஒரே பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், தம்பதியரை அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுதாதேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X