காமன்வெல்த்: 10,000 மீ., நடை பந்தயம், 3,000 மீ ஸ்டீபிள் சேஸ்- ல் இந்தியாவுக்கு வெள்ளி | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
காமன்வெல்த்: 10,000 மீ., நடை பந்தயம், 3,000 மீ ஸ்டீபிள் சேஸ்- ல் இந்தியாவுக்கு வெள்ளி
Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது.




அதில், 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பிரியங்கா கோஸ்வாமி வெற்றி பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 43 நிமிடங்கள் 38 வினாடிகளில் கடந்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்.




அதேபோல், 3, 000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஸ் முகுந்த் சாபிள் வெள்ளி வென்றார். பந்தய தூரத்தை 8 நிமிடம் 11 வினாடிகளில் கடந்து பதக்கத்தை கைப்பற்றினார்.

வெள்ளி வென்ற அவினாஸ் முகுந்த் சாபிள், பிரியங்கா கோஸ்வாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுவரை காமன்வெல்த் போட்டியில் இந்தியா 9 தங்கம், 10 வெள்ளி ,9 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X