சிறுவாணியில் தண்ணீர் வெளியேற்றம்: தமிழக அரசு பேச்சு நடத்துமா?
Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் - கேரள மாநில அரசு செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்த, குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கேரள நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.



latest tamil news



கோவை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை கேரள வனப்பகுதியில் உள்ளது; இதன் உயரம், 50 அடி. சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைகளில், 5 அடி குறைவாக, நீர் இருப்பு வைக்க அம்மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டது.

அதன்படி, சிறுவாணியில், 45 அடிக்கு நீர் இருப்பு வைக்கப்படுகிறது. சமீபகாலமாக அம்மாநிலத்தில் உள்ள மற்ற அணைகளில் முழு கொள்ளளவு தேக்கப்பட்டு நீர் நிரம்பி வழிகிறது; சிறுவாணியில் மட்டும் தேக்குவதில்லை. கடந்த மாதம், 45 அடியை நெருங்கியபோது, தமிழகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், கேரள நீர்ப்பாசனத்துறையினர் தன்னிச்சையாக மதகுகளை திறந்து, 8 அடி தண்ணீரை வெளியேற்றியதால், நீர் மட்டம், 37 அடியாக குறைந்தது.இது, தமிழக அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தற்போது, கன மழை பெய்வதால் அணையின் நீர் மட்டம் மெல்ல உயர்கிறது. தண்ணீரை திறந்து விட்டு விடக்கூடாது என்பதற்காக, குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், நிர்வாக பொறியாளர் மீரா, உதவி நிர்வாக பொறியாளர் பட்டன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சிறுவாணி அணைக்கு சென்றனர்.

கேரள மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக பொறியாளர் லிவின் பிரபுவை நேரில் சந்தித்து, 'தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியபடி, அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு நீர் தேக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.






அதற்கு, 'பாதுகாப்பு காரணங்களால் தற்போதைக்கு, 45 அடிக்கே தேக்க முடியும். கேரள அரசால் அணை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு ஆய்வு செய்து முழு கொள்ளளவு தேக்க அனுமதி அளித்து அறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே தேக்க முடியும். இரு மாநில அரசு துறை செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தச் சொல்லுங்கள்' என, நீர்ப்பாசனத்துறையினர் பதிலளித்திருக்கின்றனர்.

அதுவரை, '45 அடி வரையாவது நீரை தேக்க வேண்டும்; அதற்குள் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றக் கூடாது' எனக்கூறி விட்டு தமிழக அதிகாரிகள் திரும்பினர். நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 86 மி.மீ., அடிவாரத்தில், 44 மி.மீ., மழை பதிவானதால், நீர் மட்டம், 43 அடியாக உயர்ந்திருக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
07-ஆக-202214:21:53 IST Report Abuse
Nagarajan D கோவையின் உண்டியல் MP க்கு இதை பற்றி எல்லாம் தெரியாது... அவனுக்கு கேரளத்தின் மேல் தான் பாசம் இந்த நாசமாப்போன MP யை தேர்ந்தெடுத்த மக்களை என்ன சொல்ல.. நான் இவனுக்கு ஒட்டு போட வில்லை...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
07-ஆக-202213:03:41 IST Report Abuse
mindum vasantham malayaalikal munbu pandi endra pattapeyarudan kaikatti nirpparkal
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-ஆக-202210:14:18 IST Report Abuse
duruvasar ஸ்டாலினை கேரள மக்கள் ஶ்ரீகரிச்ச காரணம் கொண்டு அவரு வெள்ளதை ஒரு பாடு திறந்தால் தெறந்து கொல்லட்ட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X