தி.மு.க., ஆட்சியிலும் கோலோச்சும் அ.தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்கள்! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தி.மு.க., ஆட்சியிலும் கோலோச்சும் அ.தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்கள்!
Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 

தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும், செய்தி மக்கள் தொடர்புத்துறையில், அ.தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்களே முக்கியப் பதவிகளில் கோலோச்சுவதாக குமுறல் வெடித்துள்ளது.latest tamil newsகடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஜெ., இருக்கும்போதே, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட எழில், ஓய்வுக்கு பின்பும் ஏழாண்டு பணி நீட்டிப்பு பெற்று வந்தார். ஜெ., மறைவுக்கு பின், 'பவர்புல்' ஆக வலம் வந்ததோடு, தேர்தல் நேரத்தில், நாளிதழ்களில் அதிரடி விளம்பரங்களை வெளியிட்டு, கணிசமான வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மிகவும் இளவயது அதிகாரியான ஜெயசீலனை, துறையின் இயக்குநராக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். உதயசந்திரனின் தேர்வு என்பதால், வேறு யாராலும் அதில் தலையிட முடியவில்லை. ஆனால், கடந்த ஓராண்டில், இந்த ஆட்சிக்கு வந்த பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள, இத்துறை எந்த விதத்திலும் உதவவில்லை. மாறாக, மத்திய அரசுடன் மோதல் போக்கு அதிகரிப்பதற்கு, இத்துறை முக்கிய காரணமாக மாறியுள்ளது என்ற புகார் கிளம்பியுள்ளது.முக்கிய அதிகாரிகளே காரணம்கடந்த ஜன. 26ல் நடந்த குடியரசு தினவிழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி தரவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. அதிலும், மத்திய அரசு கேட்ட விளக்கத்துக்கு உரிய காலத்தில் பதில் அனுப்பாமல் சொதப்பியது, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறைதான் என்பது பின்பு தெரியவந்தது.

அதேபோன்று, 'செஸ் ஒலிம்பியாட்' விளம்பரத்திலும், பிரதமர் படத்தை தவிர்த்து, இரண்டு அரசுகளுக்கும் இடையில் மோதல் போக்கை உருவாக்கவும் இத்துறையின் முக்கிய அதிகாரிகளே காரணமாகியுள்ளனர்.அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே, இத்துறையின் இயக்குநரின் செயல்பாடுகள் இருப்பதாக, தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோன்று, தமிழகம் முழுவதும் முக்கியமான பொறுப்புகளில், அ.தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்களே கோலோச்சி வருவதாகவும் பட்டியலை அடுக்குகின்றனர்.


ஓ.பி.எஸ்.,க்கு வலதுகரம்இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பி.ஆர்.ஓ.,க்கள் கூறியதாவது:முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம், இணை இயக்குநராக (பி.ஆர்.ஓ.,) பணிபுரிந்த சுப்பிரமணி, பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக இருக்கிறார். வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ.,வாக இருந்த மோகன், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகனின் புகாரின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சில நாட்கள் கழித்து அவருடைய சொந்த ஊருக்கு மிக அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ.,வாக மாற்றப்பட்டார். இவர், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் அம்பலவாணனின் துாரத்து உறவினர்.சசிகலா குடும்ப உறவினரான செந்தில் அண்ணா, ஓ.பி.எஸ்., மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத்துக்கும் வலதுகரமாக, நான்காண்டுகள் தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருக்கின்ற, கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.கள்ளக்குறிச்சி கலவரத்தில்...அரியலுார் மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தபால் வாக்கு சேகரித்த புகாரில் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தவர் சரவணன். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரின் மகனான இவர், அதற்கு அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் அரசுக்கு எதிரான அதிருப்தியை, இவர் திட்டமிட்டே ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்களில் செல்லுார் ராஜூவின் உறவினரான நவீன் பாண்டியன், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சதீஷ், காமராஜின் மைத்துனரான ராமகிருஷ்ணன், கடம்பூர் ராஜூவின் உறவினர் சீனிவாசன், ரமணாவின் சகோதரர் சுப்பையா ஆகியோருக்கும், அவர்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் தரப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் அம்பலவாணனும் ஒரு காரணம். அவர் பேச்சைத்தான் இப்போதும் இயக்குநர் கேட்கிறார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

துறை அமைச்சர் சாமிநாதனுக்கும், இயக்குநருக்கும் இடையிலும் கடுமையான மோதல் இருப்பதாகவும் பலர் சுட்டிக் காட்டுகின்றனர். தமிழக முதல்வர் இதை விரைவாக கவனித்து, துறையில் அதிரடி மாறுதல்களை செய்ய வேண்டுமென்பதே, துறையிலுள்ள சீனியர் அதிகாரிகள் பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.-நமது சிறப்பு நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X