லாரி மீது பைக் மோதல் கல்லுாரி மாணவர் பலி  | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
லாரி மீது பைக் மோதல் கல்லுாரி மாணவர் பலி 
Added : ஆக 07, 2022 | |
Advertisement
 



விழுப்புரம் : விழுப்புரத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.விழுப்புரம், மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவி மகன் பிரதீப், 19; விழுப்புரம் அண்ணா கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இரவு 7:30 மணிக்கு, காணை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பிரதீப்பின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X