சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம்
Added : ஆக 07, 2022 | |
Advertisement
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கிட 2022-23ம் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில் முனைவோருக்கு நிவாரண உதவி வழங்கி மீண்டும் தொழில்களை நிறுவிட பாதிக்கப்பட்ட நபரின் சட்டபூர்வமான வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பாதிக்கப்பட்ட குறிப்பாக தனி நபர்கள், உரிமையாளர்கள் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன் மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு 5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு 25 லட்சம் ரூபாயாகவும் இருக்கும். மானியத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை. மேலும், நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீன மயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஊக்குவிப்பு திட்டம் வழங்கப்பட உள்ளது.

மூலதன மானியமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் 25 லட்சத்திற்குட்பட்டு வழங்கப்படும்.மேலும், விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண் 95/2ஏ2- ராஜாநகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நேரிலோ, அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X