பணிகளை முடிக்காத கான்ட்ராக்டர்களுக்கு...கறுப்பு பட்டியல்!: இழுபறி நீடிப்பதால் மாநகராட்சி எச்சரிக்கை
Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


சென்னை:சென்னையில் நடக்கும் மழை நீர் வடிகால் பணிகள், 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள், 'கறுப்பு' பட்டியலில் சேர்க்கப்படுவர் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து, ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் பிரசாந்த், தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதிகாரிகள் பேசியதாவது:சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணிகள், இலக்கு நிர்ணயம் செய்து மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழலில், 60 முதல் 70 சதவீதம் பணிகள் முடிந்திருக்க வேண்டும்.ஆனால், 50 முதல் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. ஒரு சில இடங்களில் பணிகள் வேகமாக நடந்தாலும், சில இடங்களில் மந்தமாகவே நடக்கின்றன.
இந்த நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்க, 50 முதல் 60 நாட்களே உள்ள நிலையில், பணிகளை வேகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பணிகளை வேகப்படுத்த, ஒப்பந்ததாரர்களுக்கு நாங்கள் அதிக அழுத்தம் தருகிறோம். அதையும் மீறித் தான், அவர்கள் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாநகராட்சி தயாராக உள்ளது.பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலை முதல்வர் வாகனம் செல்லும் சாலை என்பதால், அவரிடம் அனுமதி பெற்று, பணிகள் நடந்து வருகின்றன.பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில், உடனடியாக இணைப்புகளை அளிக்க வேண்டும்.
பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், மழை நீர் செல்லும் அளவிற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.உலக வங்கி பணிகள், மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும். சென்னையில் அனைத்து பகுதிகளிலும், மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டி வைத்து உள்ளோம். இதை மக்கள் பொறுத்துக் கொண்டு உள்ளனர்.
நாம் பணிகளை முடிக்காவிட்டால், மக்களிடம் அவப்பெயர் தான் ஏற்படும். 'சிங்கார சென்னை 2.0' திட்ட பணிகளையும், சிறிய வெள்ளத் தடுப்பு பணிகளையும், உடனடியாக முடிக்க வேண்டும். பணிகளின் போது, இரண்டு 'பேரி கார்டு'களை வைத்து விட்டு, இடையில் 'டேப்' போடக் கூடாது. 'டேப்' வாகனங்களை தடுக்காது. எனவே, முழுமையாக தடுப்புகளை அமைக்க வேண்டும்.
வரும் 50 நாட்களில், பணிகளை முடிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் முடிக்க வேண்டிய நீளம் எவ்வளவு உள்ளது; தினசரி எவ்வளவு கி.மீ., பணிகளை செய்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என கணக்கீட்டு, அவற்றை செய்து முடிக்க வேண்டும்.உரிய காலத்தில் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள், 'கறுப்பு' பட்டியலில் வைக்கப்படுவர்.
இனிமேல் அவர்களுக்கு மாநகராட்சியில் எந்த ஒப்பந்தமும் அளிக்கப்படாது. நீளத்தை மட்டும் முடித்து விட்டு, பணிகளை முடித்து விட்டோம் என தெரிவிக்கக் கூடாது.அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும். எல்லா பணிகளையும் முடித்து விட்டு, 'பைப்'புகளை போடக் கூடாது. பணிகள் நடைபெறும் போதே, அப்பணிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.







வகை பிரிக்கப்பட்ட கான்ட்ராக்டர்கள்!


மூன்று மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், பணிகள் அடிப்படையில் கான்ட்ராக்டர்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற வகையில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, பணிகளுக்கான தாமதம் குறித்து, அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X