மதுரை : மதுரை கெனைன் கிளப் சார்பில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடந்தது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 420க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.இதில் ராஜபாளையம், கன்னி, சிப்பிப் பாறை, கோம்பை உள்பட பல இந்திய வகை நாய்களுடன், பொமனேரியன், பெல்ஜியன் ஷெப்பர்டு, ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரெட் ரைவர், லேப்ரடார், கேன் கார்சர், ஐரிஷ் ரெட் ஷெட்டர், பாக்ஸர், டாபர்மேன், கட்டோகால், ஜாக்ரசல்கெரியர், கேரிகோஷ், கிரேட்டேன், யாக்ெஷயர் உள்பட பல வெளிநாட்டு இனங்களும் பங்கேற்றன.மொத்தம் 43 இனவகை நாய்களுக்கு தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடந்தன. உடல்அமைப்பு, நடை, போஷாக்கு, அழகு, தனித்திறன் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன.நடுவர்களாக சஞ்ஜித் சிங் முஞ்சால், சஞ்ஜித் குமார் மோகன்டி, சி. ஏ. மார்ட்டின்ஸ் இருந்தனர்.
கெனைன் கிளப் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் ராமநாதன் கூறுகையில், ''இந்த முறை ஏராளமான நாய்கள் வந்துள்ளன. ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக தேர்வு செய்து, அதில் சிறந்தவற்றிற்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. நாய் வளர்ப்பில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப முறையாக பராமரித்தால் நாய் வளர்ப்பு எளிதாக இருக்கும்” என்றார்.முதல் பரிசை பாக்ஸர், இரண்டாம் பரிசை ஜெர்மன் ெஷப்பர்டு நாய்கள் வென்றன. உரிமையாளர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.