பிறப்பு, இறப்பு, சொத்துவரி சான்றிழ்கள் கணினிமயமாகியும் ஆமை வேகம் தான்
Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்கள் நீண்ட இழுபறிக்கு பின்பே வழங்கப்படுகிறது' என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்த பின் அனைத்து அரசு சான்றிதழ்களும் ஆன்லைன் வழி பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும் ‛இ' சேவை மையங்கள் வழி சான்றிழ்களை வழங்குகிறது. இதனால் பல அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ளது. அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பிற்கு அந்தந்த வார்டு அலுவலங்களில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்ட பின் ஆன்லைனில் பதிவேற்றப்படும்.

மாநகராட்சி இணையத்தளமான www.maduraicorporation.co.in ல் ஓ.டி.பி., முறையில் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால், விண்ணப்பங்கள் ஒவ்வொரு பிரிவு அலுவலர்களை கடந்து ஆன்லைனில் வர பல மாதங்கள் ஆகிறது. பிறப்பு, இறப்பு பிரிவு பதிவாளர் ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகியும் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.

உரிய நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்த நாளில் இருந்து 3 நாளில் பெயர் மாற்ற ஆணை வழங்க வேண்டும். ஆனால், அலுவலர்கள் கேட்கும் ‛கட்டிங்'கை மட்டும் ‛கட்' பண்ணாமல் கொடுத்தால் விரைந்து ஆணை, சான்றிதழ்கள் நம் கைக்கு வந்து விடுகிறது.

மேற்கண்ட பணிகள் கணினிமயமாகியும் ஆமை வேகத்தில் நடப்பதற்கு ‛கட்டிங்' தான் காரணம். இது குறித்து கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலேன் நேரடியாக களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஆக-202207:44:50 IST Report Abuse
Bhaskaran ஒரு பிறப்புச்சான்றிதலுக்கு அதிக லஞ்சம் கொடுத்து வாங்கியதாக நண்பர் வருத்தத்துடன் கூறினார் .மேல் அதிகாரிகளும் உடந்தைதான்
Rate this:
Manian - Chennai,ஈரான்
11-ஆக-202209:07:33 IST Report Abuse
Manianஇப்போ ஏன் பிறந்தோம் என்று வருந்துவதே வழி. அவர் ஓட்டை விற்பவர், மாமூல் வாங்கி என்றால், எவ்ளோ மிச்சம் என்று கேகு் வெட்டலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X