போலீஸ் செய்திகள்  | மதுரை செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள் 
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

மயங்கியவர் இறப்பு

மதுரை: செல்லுார் அஹிம்சாபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 47, இவர் அதே பகுதியில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து இறந்தார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.நகை பறிப்பு

மதுரை: புட்டுத்தோப்பு செங்கப்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 45, இவர் அதே பகுதி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


7 பேர் கைது

மதுரை: மாடக்குளத்தில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி ராஜேந்திரன் 41, காளவாசல் ரஞ்சித்குமார் 37, கீரைத்துறை திருச்செல்வம் 36 ஆகியோரை எஸ்.ஐ., அழகுமுத்து கைது செய்தார்.

பரவையில் கஞ்சா விற்ற தேனுார் கணேசன் 30, மதுரை சுந்தரம் 35, விளாங்குடி அஸ்வின் 25, சமயநல்லுார் மோகன்ராஜ் 29 ஆகியோரை இன்ஸ்பெக்டர் வசந்தா கைது செய்தார்.-

பணம் திருட்டு

வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை சவுந்தரபாண்டி 43, மணல் அள்ளும் இயந்திரம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் வாடிப்பட்டி வங்கியில் தம்பியின் மருத்துவ செலவிற்கு ரூ.1.90 லட்சம் எடுத்துள்ளார். நான்கு வழிச்சாலையில் மணல் அள்ளும் இயந்திரத்தில் பணத்தை வைத்து விட்டு டீ குடித்து திரும்பிய போது பணம் மாயமானது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாட்ச்மேன் பலி

திருமங்கலம் : தனக்கன்குளம் வெண்கலம் மூர்த்தி நகரை சேர்ந்த மாரியப்பன் 55, மதுரை அமெரிக்கன் கல்லூரி வாட்ச்மேன். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் சென்றார். பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார். சின்னாளபட்டி கார் டிரைவர் தினேஷ் பாபு மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.-------

இருவர் கைது

திருமங்கலம் : கப்பலூர் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வந்த உச்சபட்டியை சேர்ந்த அனீஸ் குமார் 21, மற்றும் 16 வயது சிறுவனை நிறுத்தி சோதனை செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தி வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.--

விபத்தில் பலி

கொட்டாம்பட்டி: புழுதிபட்டி கூலி தொழிலாளி மகாதேவன் 31, கணபதிபட்டி உறவினர் சுப்பிரமணியை 32, நேற்று முன்தினம் வஞ்சிநகரத்திற்கு டூ வீலரில் அழைத்து சென்றார். 'ெஹல்மெட் அணியவில்லை. பள்ளபட்டி விநாயகர் கோயில் அருகே சிங்கம்புணரி ஆண்டிச்சாமி 35, டூவீலரில் குறுக்கே வரவே மோதலில் மகாதேவன் இறந்தார். சுப்பிரமணி ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கிறார்.-
தீப்பிடித்த ஆட்டோ

வாடிப்பட்டி: அலங்காநல்லுார் பூக்கார தெரு அருண்குமார் 24, இவர் நேற்று இரவு 7:30 மணிக்கு வாடிப்பட்டியில் இருந்து ஆட்டோவில் 7 பயணிகளுடன் அலங்காநல்லுார் சென்றார். வாடிப்பட்டி மயானம் அருகே ஆட்டோவில் இன்ஜின் ஆயில் வெளியேறி உள்ளது. பின் திடீரென தீப்பிடிக்க துவங்கியதும் பயணிகள் உடனடியாக இறங்கினர். டிரைவர் அருண் தடுக்க முயற்சித்தும் ஆட்டோ முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X