மேல்மலையனூரில் குவிந்த பக்தர்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மேல்மலையனூரில் குவிந்த பக்தர்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 



செஞ்சி, : மேல்மலையனுாரில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தவும், சாமி தரிசனம் செய்யவும் குவிந்த பக்தர்களால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மனை லட்சக்கணக்கான குடும்பத்தினர் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவர்கள் ஆடி மாதத்தில் அங்காளம்மனுக்கு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி, குழந்தைகளுக்கு காது குத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.வழக்கமாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளியன்று நவமியும், இரண்டாம் வெள்ளியன்று பாட்டிமையும், மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று அஷ்டமியும் வந்தது. இதனால் அந்த நாட்களில் மொட்டையடித்து காது குத்துவதை தவிர்த்து விட்டனர்.வரும் 12ம் தேதி நான்காவது வெள்ளிக்கிழமை வருகிறது. அதுவும் பவுர்ணமி முடிந்து தேய்பிறையில் வருகின்றது. எனவே வளர்பிறையில் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி காது குத்துவதற்காக நேற்று மேல்மலையனுாரில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.இதனால் மேல்மலையனுாருக்கு செல்லும் வளத்தி சாலை, கொடுக்கன்குப்பம் சாலை, தாயனுார் சாலை, சிறுதலைப்பூண்டி சாலையில் நேற்று பிற்பகலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவிலிலும் பக்தர்கள் அலைமோதியதால் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X