கிரைம் செய்திகள்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



வேன் மோதி தொழிலாளி சாவு

புவனகிரி: மேலமணக்குடி முருகன் கோயில் தெரு, அமிர்தலிங்கம், 55; விவசாயக் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அருகில் உள்ள கோவிலுக்கு புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த வேன் (டி.என்.31.ஏ.சி. 3668) மோதி அமிர்தலிங்கம் படு காயமடைந்தார். சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கல்லுாரி மாணவர் சாலை விபத்தில் பலி

வடலுார்: வடலுார், சவேரியர் நகரைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜாய்பிரிட்டோ, 19; பெரம்பலுார் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த லியோ, 19; இருவரும் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.வடலுார் நான்கு முனை சந்திப்பில் வந்த போது, பின்னால் வந்த மினி லாரி பைக் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் படு காயமடைந்த ஜாய்பிரிட்டோ குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்தார். காயமடைந்த லியோ புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சாணி தெளித்த தகராறு: 4 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: வெள்ளக்கரை காலனியை சேர்ந்தவர் தண்டபாணி, 43. இவரது தம்பி சாரங்கபாணி. இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். தண்டபாணி மனைவி ேஹமா தமது வீட்டு வாசலில் சாணம் தெளிக்கும் போது, சாரங்கபாணியின் வீட்டு வாசலில் பட்டுள்ளது. இதுகுறித்து சாரங்கபாணியின் மனைவி மீனா கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மீனா ஊமங்களத்தில் உள்ள தனது தந்தை ராஜேந்திரன், தாய் சித்ரா, தம்பி அய்யப்பன் ஆகியோரை வரவழைத்தார். அவர்கள் தண்டபாணியை தாக்கினர். தண்டபாணி புகாரின் பேரில் ராஜேந்திரன் உட்பட நால்வர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

வடலுார்: வடலுார், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் பிரான்சிஸ், 26; பெயின்டர். இவர், நேற்று காலை கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் மொட்டை மாடியில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மேலே செல்லும் மின் கம்பியில் கை பட்டு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.உண்டியல் உடைப்பு: போலீசார் விசாரணை

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த எழுத்தூரில் நல்லதங்காள் கோவில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் கோவில் உண்டியலை, திரிசூலத்தை வைத்து உடைத்து காணிக்கையை திருடிச் சென்றனர். தகவல் அறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி.,காவ்யா மற்றும் போலீசார் நேற்று மாலை நேரில் விசாரணை நடத்தினார். உண்டியலில் 30 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X