கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 150 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் நாசம் | கடலூர் செய்திகள் | Dinamalar
கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 150 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் நாசம்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 



சிதம்பரம், : சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 150 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமானது.சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரை கிராமங்களான பெராம்பட்டு, ஜெயங்கொண்ட பட்டினம், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் , திட்டுக்காட்டூர், மேலகுண்டல பாடி, கீழ குண்டலபாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் கத்தரி, வெண்டை, அவரை, வாழை, மரவள்ளி, முருங்கை மற்றும் அரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் கன மழை காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 150 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. இதனால் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X