எம்.ஜி.ஆர்., செல்வாக்கு நீடித்து நிலைக்கும் பிறந்தநாள் விழாவில் சைதை துரைசாமி புகழாரம் | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
எம்.ஜி.ஆர்., செல்வாக்கு நீடித்து நிலைக்கும் பிறந்தநாள் விழாவில் சைதை துரைசாமி புகழாரம்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 
Latest district News



சென்னை : ''சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எம்.ஜி.ஆர்.,யின் மக்கள் செல்வாக்கு, என்றும் நீடித்து நிலைக்கும்'' என, சைதை துரைசாமி கூறினார்.சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர்., பேரவை சார்பில், எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் விழா, தி.நகர், சர்.பிடி.தியாகராயர் கலையரங்கத்தில், நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிநேய அறக்கட்டளை தலைவர் மற்றும் உலக எம்.ஜி.ஆர்., பேரவை தலைவருமான சைதை துரைசாமிக்கு, எம்.ஜி.ஆர்., தொண்டர்கள், பண மாலை மற்றும் கிரீடம் அணிவித்தனர்.விழாவில், சைதை துரைசாமி பேசியதாவது:

எம்.ஜி.ஆரை தவிர்த்து, திராவிட இயக்க வரலாற்றை எழுத முடியாது. அண்ணா காலத்தில், திராவிட இயக்கத்தில், திரையுலகம் சார்ந்த பட்டியலில் நடிகர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் இருந்தனர். இதில், யாருக்கும் கிடைக்காத இடம் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது.'கட்சிக்கு நிதி சேர்ப்பதை விட முகத்தை காட்டு; ஓட்டு அதிகமாக கிடைக்கும்' என, எம்.ஜி.ஆரைய பார்த்து, அண்ணா கூறினார். வசீகரம், பேச்சு, குரல் வளத்தால் சாதித்த காரணத்தில் தான், இன்றும் பலரது மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கூரிய சிந்தனையால், சமூக மாற்றத்திற்காக ஆழ்ந்து சிந்தித்தவர் எம்.ஜி.ஆர்., 1957, சட்டசபை தேர்தலில், 15 இடங்களில் வெற்றி பெற, எம்.ஜி.ஆர்., தான் காரணம் என, அண்ணா உணர்ந்தார். இதற்காக நடத்திய சிறப்பு கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., மட்டுமே பங்கேற்றார்.எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டபோது, எம்.ஜி.ஆர்., சகாப்தம் முடிந்தது என பலரும் நினைத்தனர்.ஆனால், கடைசி வரை கதாநாயகனாகவும், முதல்வராகவும் வாழ்ந்தவர்

எம்.ஜி.ஆர்., சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எம்.ஜி.ஆர்.,யின் மக்கள் செல்வாக்கு, என்றும் நீடித்து நிலைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே, எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் சண்முகம், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் ஸ்ரீதர் நவராக்சின் எம்.ஜி.ஆரின் இன்னிசை பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X