சரணாலயங்களுக்கு 'ராம்சர்' அங்கீகாரம்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


அச்சிறுப்பாக்கம் : வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு சர்வதேச அளவில் 'ராம்சர்' அங்கீகாரம் தரப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, மியான்மர், வங்கதேசம், சைபீரியா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 26 வகைகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வருகின்றன.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வந்து இனப்பெருக்கத்திற்கு பின், மே, ஜூன் மாதங்களில், சொந்த நாட்டிற்கு குஞ்சுகளோடு திரும்புகின்றன.அரிய வகை வெளிநாட்டு பறவைகளை காண, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.6 கி.மீ.,வேடந்தாங்கல் ஏரி மட்டுமின்றி, இங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள கரிக்கிலி பெரிய ஏரியிலும், பறவைகள் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இணையாக, கரிக்கிலி பகுதியும் பறவைகள் சரணாலயமாக, 1989ல் உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் வேடந்தாங்கலில், பறவைகளின் சீசன் துவங்கும் போது, கரிக்கிலி சரணாலயமும், சுற்றுலா பயணியரின் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.பறவைகளின் வருகை அதிகரிப்பு காரணமாகவும், ஏரிகளின் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு சார்பில், வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு, சர்வதேச அங்கீகாரமான 'ராம்சர்' அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.இந்த அங்கீகாரம், சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் இருப்பதால், இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேடந்தாங்கல் விவசாயி இ.பரமசிவம், 51, என்பவர் கூறியதாவது:

வேடந்தாங்கல் சரணாலயத்தை சுற்றி, அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன மருந்து போன்றவற்றை, நிலங்களில் பயன்படுத்துவதில்லை.பல விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர். ஏனென்றால், அருகில் உள்ள வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள், வயல்களில் உரமிடும் நேரத்தில் தண்ணீர் குடிக்கும்.தவிர, அதில் உள்ள நெல்மணிகளை சாப்பிடுவதால், ரசாயன மருந்துகளை முழுமையாக தவிர்க்கிறோம்.

மகிழ்ச்சிபறவைகளுக்கு உணவு கிடைக்கும் வகையில், அதிகம் லாபம் தரும் சவுக்கு போன்ற மர பயிரை தவிர்த்து, நெல் பயிரிடுகிறோம்.மேலும், வேடந்தாங்கலில் பறவைகள் முகாமிடும் நாட்களில், அவற்றுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு தீபாவளிக்கு பட்டாசுகளை கூட வெடிக்கமாட்டோம்.இப்படிப்பட்ட சூழல் வளர்த்துள்ள நிலையில், 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.இந்த அறிவிப்பால், வேடந்தாங்கல், கரிக்கிலிக்கு மாநில - மத்திய அரசுகளின் பல்வேறு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.50 ஆயிரம் பறவைகள்




மதுராந்தகம் தாலுகாவில், பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம், நாட்டிலேயே மிகவும் பழமையான, பாரம்பரிய சிறப்புள்ள பறவைகள் சரணாலயம். கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, பாம்புதாரா உள்ளிட்ட, 40 வகைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், ஆண்டுதோறும் வருகின்றன. சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரின் கவனத்தை கவர்ந்துள்ள நிலையில், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.என்.ராஜேந்திரன், 75,சமூக ஆர்வலர், துறையூர், கரிக்கிலி.




நகரங்களில் இருந்து சரணாலயத்திற்கு கி.மீ., விபரம்

ஊர் பறவைகள் சரணாலயம் கி.மீ.,சென்னை -- வேடந்தாங்கல், கரிக்கிலி 86, 93செங்கல்பட்டு வேடந்தாங்கல், கரிக்கிலி 25, 32காஞ்சிபுரம் வேடந்தாங்கல், கரிக்கிலி 46, 39மதுராந்தகம் வேடந்தாங்கல், கரிக்கிலி 14, 20மேல்மருவத்துார் வேடந்தாங்கல், கரிக்கிலி 19, 26






போதிய வசதிகள் தேவை

சமூக ஆர்வலர் கூறியதாவது:கடந்த 2014ல், 50 லட்சம் ரூபாய் நிதியில் கரிக்கிலி சரணாலயம் மேம்படுத்தப்பட்டது. நடைபாதை விரிவுபடுத்துதல், பார்வையாளர்கள் மாடம், குடிநீர் குழாய்கள், கழிப்பறை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் கரிக்கிலி சரணாலயத்தை சரியான முறையில் பராமரிக்காததால், ஏரி துார்ந்துள்ளது. இதனால், அதிக நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதேபோல், சுற்றுச்சுவர், கம்பி வேலி, பெயர் பலகைகள், பார்வையாளர்கள் மடங்கள், கற்கள் பதித்த நடைபாதை, பயணியர் அமர ஆங்காங்கே இருக்கைகள், பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, புதர்மண்டி உள்ளன. சரணாலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்குவதற்கு விடுதி, கழிப்பறை, முறையான போக்குவரத்து, சுத்தமான குடிநீர், பயணியருக்கு ஓய்வு அறை, தரமான உணவு வழங்கும் ஹோட்டல்கள் என, எந்த அடிப்படை வசதியும் கிடையாது. பயணியருக்கு தேவையான எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு இல்லை. தற்போது 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்துள்ளதால், நிதி ஒதுக்கி மேற்கண்ட வசதிகள் கிடைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X